அமைச்சரவை அமைச்சர்கள் எட்டுப் பேர் மீது உச்ச நீதிமன்ற நீதியரசர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் – Latest Tamil News update in Sri Lanka | Tamil Natonal news, Tamil News, Tamil News Agency, Tamil Magazine, Tamil News Paper in Sri Lanka – Thamilthanthi.com

Latest Tamil News update in Sri Lanka | Tamil Natonal news, Tamil News, Tamil News Agency, Tamil Magazine, Tamil News Paper in Sri Lanka – Thamilthanthi.com

பிரேஸிலின் மிகப்பெரிய மோசடிப் பிரச்சினையுடன் தொடர்புகொண்டிருப்பதாகக் கூறப்படும் அமைச்சரவை அமைச்சர்கள் எட்டுப் பேர், டசின் கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒருவர், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவானது, ஜனாதிபதி மிஷெல் தெமருக்கும் பிரேஸிலின் உயர் அரசியல்வாதிகளுக்கும் விழுந்த பாரிய அடியாக நோக்கப்படுகிறது.   விசாரணையின் கீழுள்ள பெயர்கள், பிரேஸில் அரசியலில் யாருக்கு யார் என்றவாறே நீதியரசர் எட்சன் பஷினினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது முன்னாள் அரசியல்வாதிகளையும் ஜனாதிபதி வேட்பாளர்களாக வரவுள்ளவர்களையும் பாதித்துள்ளது.

இந்நிலையில், பிரேஸிலின் சா போலோ நகரத்தில், அரசியல் மோசடிக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் சாடிகளும் சட்டிகளையும் அங்குள்ளோர் உடைத்துள்ளனர்.   இதேவேளை, பெயர்கள் வெளியாக ஆரம்பித்தவுடன் தலைநகர் பிரேஸிலியாவிலுள்ள கீழ்ச் சபையில், அமர்வொன்றிலிருந்து உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர்.

எட்டு அமைச்சர்கள் அல்லது ஏறத்தாழ, ஜனாதிபதி தெமரின் மூன்றிலொரு பங்கிலான அமைச்சரவை மீதான விசாரணையினால், சிக்கனச் சீர்திருத்தங்களை நிறைவேற்றும் ஜனாதிபதி தெமரின் நடவடிக்கையில் தடை ஏற்படவுள்ளது.    இந்நிலையில், அமைச்சர்கள் மீதான விசாரணை தொடர்பில், ஜனாதிபதி தெமரின் அலுவலகம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்