வேலை கெடக்குது வேலை: முதலில் இந்த விளம்பரத்தை பாருங்க | Transgender mom starring ad is really touching – Tamil Oneindia

மும்பை: திருநங்கை ஒருவர் ஆதரவில்லா சிறுமியை தனது சொந்த மகள் போன்று பாசமாக வளர்ப்பது குறித்த விளம்பரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மும்பையை சேர்ந்தவர் கவுரி சாவந்த்(37). திருநங்கை மற்றும் சமூக ஆர்வலர். பாலியல் தொழிலாளியான அவரது தோழி எய்ட்ஸ் நோயால் மரணம் அடைய அவரின் 6 வயது மகள் காயத்ரி ஆதரவில்லாமல் அனாதையானார்.

ஆனால் கவுரியோ காயத்ரியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சொந்த மகள் போன்று பாசம் காட்டி வளர்த்து வருகிறார். இதை தான் விக்ஸ் விளம்பரத்தில் அருமையாக காண்பித்துள்ளனர். கவுரியால் சட்டப்படி காயத்ரியை தத்தெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்