பக்குவமில்லாதவர்.. மூன்றாம் தர அரசியல்வாதி.. ஜெயக்குமாரை வெளுத்து வாங்கிய கேபி.முனுசாமி! | Former minister KP Munusamy condemns Minister Jayakumar – Tamil Oneindia

Former minister KP Munusamy condems Minister Jayakumar. For talking about OPS that ops will say he is the reason for the trumps victory. Jayakumar behaving as the immatured politician he said.

சென்னை: ஓபிஎஸை நக்கலடித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயக்குமார் ஒரு பக்குவமில்லாத அரசியல்வாதி என்றும் மூன்றாம் தர அரசியல்வாதி என்றும் வெளுத்து வாங்கினார்.

அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். சசிகலா குடும்பம் ஒதுக்கி வைக்கப்பட்டது தாங்கள் நடத்தும் தர்மயுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி ஓபிஎஸ் கூறினார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் இன்று பேட்டியின் போது பதில் கூறினார்.

ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கி வைக்கவில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார். கட்சியின் நலனுக்காகவே அனைவரும் பேசி சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்