கைமாறும் தேசிய மாநில நெடுஞ்சாலைகள் : டாஸ்மாக் கடைகளை திறக்க புது வியூகம்

கல்விமலர்

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, மாநகராட்சி, நகராட்சி எடுத்து கொள்வதற்கு, உரிய மன்ற தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்க, நகராட்சி நிர்வாக ஆணையர், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் இருந்த, 3,120 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டு உள்ளன. புதிய கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். மது விற்பனை, பாதியாக சரிந்ததால், மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் வரும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை,

மாநகராட்சி, நகராட்சி சாலைகளாக மாற்ற முடிவு செய்துஉள்ளனர். இதற்கான
தீர்மானம் நிறைவேற்ற, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களுக்கு,
நகராட்சி நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள கடித விபரம்: மத்திய,மாநில அரசு துறைகளிடம் அனுமதி பெற்று, பல்வேறு பணிகள், மாநகராட்சி, நகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குடிநீர், பாதாள சாக்கடை பணிகளை, விரைந்து நடைமுறைப் படுத்தி, செலவினங்களை குறைக்க வேண்டிய சூழல் உள்ளது.குறிப்பாக, பேரிடர் காலங்களில், பிற துறைகளிடம் அனுமதி பெற்று, அத்தியாவசிய பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டி உள்ளது. பிற துறைகளுக்கு செலுத்த வேண்டிய செலவினங்கள், காலதாமதத்தை தவிர்க்க, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிக்குட்பட்ட தேசிய, மாநிலநெடுஞ் சாலைகள், மாவட்ட முக்கிய சாலை கள், ஊராட்சி சாலைகள் மற்றும் இதர
மாவட்ட முக்கிய சாலை களை, மாநகராட்சி, நகராட்சி வசம் எடுத்து கொள்ள, உரிய
மன்ற தீர்மானத்தை இயற்றி, அதை, தனி நபர் மூலம், வரும், 25க்குள் அலுவலகத்திற்கு

அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க, அரசு திட்டமிட்டுள்ளது, அம்பலமாகி உள்ளது. இதற்கிடையில், உடுமலைப்பேட்டையில், நேற்று நடந்த நெடுஞ் சாலை துறை, சாலை ஆய்வாளர்கள் சங்கக் கூட்டத்தில், திட்டத்தை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு, நெடுஞ்சாலை துறை பொறியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். – நமது நிருபர் –

உட்கட்சி குழப்பத்தில் ஆளுங்கட்சி ‘ஊசலாடுது’ ஏழைகளின் …

டில்லி போலீஸ் கிடுக்கிப்பிடியில் தினகரன்… இடியாப்பம்! …

வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு நீக்கம்; உ.பி., முதல்வரின் …

முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி திட்ட பணிகளை… …

தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ்; தற்காலிகமாக …

தி.மு.க., போராட்டம்: ராமதாஸ் செம காட்டம்

வாசகர் கருத்து (13)

மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் வரும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சி சாலைகளாக மாற்ற முடிவு செய்து உள்ளனர். இது எவ்வளவு மோசமான திட்டம். ஏற்கனவே உங்கள் கட்டுபாட்டிக்குள் உள்ள சாலைகளை பராமரிக்காமல் விட்டு குண்டும் குழியுமாக உபயோகத்திற்கு லாயக்கில்லாமல் இருக்கிறது… இப்பொழுது இது வேறா… கிழிந்தது க்ரிஷ்ணவராம்…

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்