மக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்

நாங்கள் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகின்ற நிலையில், அண்மையில் முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’ இன்றுவைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமது நிலங்களை விடுவிக்கக்கோரி மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். அந்த மாக்களுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையிலே அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பல்வேறு இடங்களில் மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை தொடர்பில் வலியுறுத்தி வருகின்றார்.

குறித்த செயற்பாடானது இன்றைய கால கட்டத்தில் அவசியமானதொரு விடயமாக காணப்படுகின்றது. நான் அண்மையில் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பபட்ட பூ மலந்தான் கிராமத்திற்குச் சென்றிருந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்