மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்

Published by Priyatharshan on 2017-05-02 18:42:57

மலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவகுழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன் என இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்சு ஆலோ­ச­கராக குறு­கிய காலத்­திற்கு நியமிக்கப்பட்டுள்ள அலன் டொனால்ட் தெரிவித்தார்.இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆலோசகராக என்னை நியமித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அதுவும் ஐ.சி.சி. நிகழ்வொன்றுக்கு நான் ஆலோசகராக இருப்பதென்பது விசேடமானது. இலங்கையில் மிகவும் பெறுமதியான பயிற்சியாளர்கள் அணியொன்று உள்ளது.  அவர்களுடன் இணைந்துசெயற்படுவது அழகானதொரு தருணமாக இருக்கும்.  எந்தவொரு சவலுக்கும் முகங்கொடுத்து அணியை முன்னோக்கிக்கொண்டு செல்வதே மிகவும் பிரதானம். அடுத்த இரு வாரங்களில் இடம்பெறவுள்ள பயிற்சி முகாம்களில் இணைந்து செயற்படவுள்ளேன். அடுத்த இரு மாதங்கள் நான் இலங்கை அணியுடன் இணைந்திருந்து தேவையான ஆலோசனைகளை வழங்குவேன்.இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடுவதென்பது மிகவும் எளிதான காரியமல்ல. அதுவும் ஜூன் மாதங்களில் கடும் குளிர் நிலவுகின்ற காலத்தில் இந்த ஐ.சி.சி சம்பியன் கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளது. இத் தொடரில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இருந்தாலும் நாணயச் சுழற்சிகளில் வெற்றிபெற்றால் முதலில் களத்தடுப்பையே தெரிவுசெய்யவேண்டும்.இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் லசித் மலிங்க முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அவர்தான் இலங்கை வேகப்பந்து வீச்சார்களின் தலைவர் என்றுகூட சொல்லாம். அவருடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். தற்போது அவர் உபாதையிலிருந்து மீண்டு வந்து மீண்டும் ஒருநாள் போட்டிகளில் களமிறங்கவுள்ளார். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவக்குழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன்.

அதேபோல் எனது பயிற்சிகள் தேசிய அணிக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. வளர்ந்துவரும் இளையோர்களுக்குமாக அமையும். அவர்களிடத்திலிருந்துதான் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்