Tamilmurasu – Serena Williams’s Pregnancy Is Confirmed After Day of Speculation,செரீனா வில்லியம்ஸ் கர்ப்பம் உறுதியானது : 2017 முழுவதும் விளையாட மாட்டார்

Serena Williams’s Pregnancy Is Confirmed After Day of Speculation

நியூயார்க்: அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்-தொழிலதிபர் அலெக்சிஸ் ஓஹானியனுக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் வயிறு சற்று பெருத்து தெரிவது போன்ற தனது படத்தை சமூக வலை தளங்களில் செரீனா வில்லியம்ஸ் நேற்று வெளியிட்டார். அதன் கீழ் ‘20 வாரங்கள்’ என குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் செரீனா வில்லியம்ஸ் உடனே அந்த படத்தை நீக்கி விட்டதால் குழப்பம் நிலவியது. இந்நிலையில் செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக இருப்பதை அவரது செய்தி தொடர்பாளர் கெல்லி புஷ் நோவாக் இன்று உறுதி செய்தார். இதனால் 2017ம் ஆண்டு முழுவதும் செரீனா வில்லியம்ஸ் விளையாட மாட்டார். 2018ம் ஆண்டில் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப செரீனா வில்லியம்ஸ் திட்டம் வைத்திருப்பதாகவும் கெல்லி புஷ் நோவாக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

வீடியோ செய்திகள்