All posts by log

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்!

சென்னை: சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மில்லர் சாலையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஒரே பைக்கில் ஒருவழிப் பாதை வழியாக வந்ததாக கூறப்படுகிறது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

அண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன? : சபையில் பதிலளித்தார் பிரதமர்

Published on 2017-05-03 19:51:00

ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய நிறுவனத்திற்கும் இடையில் கூட்டு பங்காண்மையின் அடிப்படையில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எனினும் இந்தியா விஜயத்தின் போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

உதய கம்மன்பில எம்.பி கேள்வி எழுப்பும் போது,

மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்

Published by Priyatharshan on 2017-05-02 18:42:57

மலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவகுழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன் என இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்சு ஆலோ­ச­கராக குறு­கிய காலத்­திற்கு நியமிக்கப்பட்டுள்ள அலன் டொனால்ட் தெரிவித்தார்.இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆலோசகராக என்னை நியமித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அதுவும் ஐ.சி.சி. நிகழ்வொன்றுக்கு நான் ஆலோசகராக இருப்பதென்பது விசேடமானது. இலங்கையில் மிகவும் பெறுமதியான பயிற்சியாளர்கள் அணியொன்று உள்ளது.  அவர்களுடன் இணைந்துசெயற்படுவது அழகானதொரு தருணமாக இருக்கும்.  எந்தவொரு சவலுக்கும் முகங்கொடுத்து அணியை முன்னோக்கிக்கொண்டு செல்வதே மிகவும் பிரதானம். அடுத்த இரு வாரங்களில் இடம்பெறவுள்ள பயிற்சி முகாம்களில் இணைந்து செயற்படவுள்ளேன். அடுத்த இரு மாதங்கள் நான் இலங்கை அணியுடன் இணைந்திருந்து தேவையான ஆலோசனைகளை வழங்குவேன்.இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடுவதென்பது மிகவும் எளிதான காரியமல்ல. அதுவும் ஜூன் மாதங்களில் கடும் குளிர் நிலவுகின்ற காலத்தில் இந்த ஐ.சி.சி சம்பியன் கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளது. இத் தொடரில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இருந்தாலும் நாணயச் சுழற்சிகளில் வெற்றிபெற்றால் முதலில் களத்தடுப்பையே தெரிவுசெய்யவேண்டும்.இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் லசித் மலிங்க முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அவர்தான் இலங்கை வேகப்பந்து வீச்சார்களின் தலைவர் என்றுகூட சொல்லாம். அவருடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். தற்போது அவர் உபாதையிலிருந்து மீண்டு வந்து மீண்டும் ஒருநாள் போட்டிகளில் களமிறங்கவுள்ளார். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவக்குழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன்.

அதேபோல் எனது பயிற்சிகள் தேசிய அணிக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. வளர்ந்துவரும் இளையோர்களுக்குமாக அமையும். அவர்களிடத்திலிருந்துதான் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்கவேண்டும் என்றார்.

மக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்

நாங்கள் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகின்ற நிலையில், அண்மையில் முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’ இன்றுவைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமது நிலங்களை விடுவிக்கக்கோரி மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். அந்த மாக்களுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையிலே அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பல்வேறு இடங்களில் மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை தொடர்பில் வலியுறுத்தி வருகின்றார்.

குறித்த செயற்பாடானது இன்றைய கால கட்டத்தில் அவசியமானதொரு விடயமாக காணப்படுகின்றது. நான் அண்மையில் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பபட்ட பூ மலந்தான் கிராமத்திற்குச் சென்றிருந்தேன்.

​மே தினப் பேரணி: பஸ்ஸில் இருந்து விழுந்த ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்

Back to Top

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க மாற்று வழிகள் ஏராளம் – அமைச்சர் றிஷாட்

 

அரசாங்க தொழில் தான் தேவை என்று படித்தவர்கள் அடம்பிடிப்பதனால் தான் இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் இவ்வளவு தூரம் தலைவிரித்தாடுவதற்கு காரணம் என கைத்தொழில் வர்த்தத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சிறியளவிலான உணவு உற்பத்தி முயற்சிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு அமைச்சின்  கேற்போர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

வவுனியாவில் சிறுவன் தற்கொலை முயற்சி : அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Published by Pradhap on 2017-05-01 16:05:58

வவுனியா ஓமந்தையில் சிறுவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

முகவரி கேட்பது போல் நடித்து கழுத்தை நெரித்து திருடர்கள் கைவரிசை! பெண்களையும் நம்பமுடியவில்லை

Send NewsAdvertise with us

Home
>
Crime > View

அபாயம் ! நீரை சிக்கனமாக பாவிக்கவும்: அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு எச்சரிக்கை

Published on 2017-04-29 20:55:24

நாட்டைப் பிடிப்பதற்கான யுத்தம் எதிர்காலத்தில் இடம்பெறப்போவதில்லை. மேலும் வேறு காரணங்களுக்கும் யுத்தம் இடம்பெறப்போவதில்லை. மாறாக நீரைப் பெற்றுக்கொள்வதிலேயே எதிர்காலத்தில் யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே நீரை விரயம் செய்யாது சிக்கனமாகப் பாவிக்க வேண்டுமென அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பொல்கஹவெல, பொத்துஹெர மற்றும் அளவ்வ ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு  பொத்துஹெர பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,